Short Stories : Crow and Cunning Fox
--Crow and Cunning Fox-- ஒரு ஊரில் பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள். அவள் வடைகளை பார்வைக்காக ஒரு தட்டில் அடுக்கி வைத்திருந்தாள்.மரத்தில் இருந்த காகம் வடைகளை பார்த்தது. அது வடை ஒன்றை சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டது. எவ்வாறு வடையை எடுப்பது என்று யோசித்தது. பாட்டி களைப்பாக இருந்தவேளை காகம் வடையை பறந்து வந்து எடுத்தது.பின்னர் அருகில் உள்ள மரத்தில் உட்கார்ந்தது. நரி ஒன்று நடந்தததை பார்த்துக் கொண்டு நின்றது. நரி காகத்தின் வடையை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்று விரும்பியது. காகம் இருந்த மரத்திற்கு அருகில் சென்றது. “ ஏய் காகமே நீ ஒரு அழகான பறவை.உனது குரலும் அழகாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நீ ஒரு பாட்டு பாடுவாயா? என்று காகத்திடம் கேட்டது. காகம் மிக மகிழ்ச்சி அடைந்தது. பின்னர் சப்தமாக பாட ஆரம்பித்தது.அப்போது அதன் வாயில் இருந்து வடை கீழே விழுந்தது.நரி வடையை பாயந்து சென்று எடுத்தது. பின்னர் காட்டிற்குள் சென்றது. காகம் ஏமாற்றம் அடைந்தது.
1) பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்
2) பாட்டி வடைகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்திருந்தாள்
3) காகம் வடை ஒன்றை சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டவில்லை
4) காகம் வடையை தூக்கி சென்று அருகில் உள்ள வீட்டின் மேல் உட்கார்ந்தது
5) நரி காகத்தின் வடையை சாப்பிட விரும்பியது
6) நரி பாட்டியிடம் “நீ ஒரு பாட்டு பாடுவாயா?” என்று கேட்டது
7) காகம் சப்தமாக பாட ஆரம்பித்தது
8) காகத்தின் வாயில் இருந்து வடை கீழே விழுந்தது.
9) நரி பணத்தை பாயந்து சென்று எடுத்தது
10) காகம் வடையை சாப்பிட்டது.