Reading Comprehension My Family

My Family

--எனது குடும்பம்--

எனது பெயர் துவாரகா.எனது குடும்பம் ஒரு அழகான குடும்பம். எனது குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள்.

எனது அப்பாவின் பெயர் சந்திரகுமார். அவர் தபால் நிலையத்தில் உதவி முகாமையாளராக வேலை செய்கிறார். எனது அப்பா நன்றாக கவிதை எழுதுவார்.

எனது அம்மாவின் பெயர் அனுஷ்கா. அவர் மக்கள் வங்கியில் வேலை செய்கிறார்.அவர் சுவையாக சமையல் செய்வார்.

எனது பெயர் துவாரகா.நான் தரம் 11 இல் கொழும்பு பெண்கள் பாடசாலையில் படிக்கிறேன்.எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறார்கள்.

எனது தம்பியின் பெயர் வினித்.அவன் தரம் 5 இல் பம்பலப்பிடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கிறான். தம்பி நன்றாக காற்பந்து விளையாடுவான்.

எனது தங்கையின் பெயர் கலை வாணி. அவள் தரம் 2 இல் பம்பலப்பிட்டி பெண்கள் பாடசாலையில் படிக்கிறாள்.அவள் நன்றாக சித்திரம் வரைவாள்.

1) துவாரகாவின் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
6
5
4
2) துவாரகாவின் அம்மா-அப்பா பெயர் என்ன?
அனுஷ்கா-சந்திரகுமார்
அனுசாந்தி- சந்திரன்
அனுஷா-சந்திரா
3) துவாராகவின் அப்பா எங்கே வேலை செய்கிறார்?
வங்கி
தபால் நிலையம்
வெளிநாடு
4) துவாரகாவின் அப்பாவின் திறமை என்ன?
படம் வரைதல்
பாட்டு பாடுதல்
கவிதை எழுதுதல்
5) துவாரகவுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்?
இரண்டு தம்பிமார் ஒரு தங்கை
இரண்டு தம்பிமார் ஒரு தங்கை
ஒரு தம்பி ஒரு தங்கை
6) அனுஷ்கா எந்த வங்கியில் வேலை செய்கிறார்?
ஓரியன் வங்கி
பொது வங்கி
மக்கள் வங்கி
7) அனுஷ்காவுக்கு என்ன திறமை இருக்கிறது?
படம் வரைதல்
பாட்டு பாடுதல்
சுவையாக சமைத்தல்
8) வினித் எந்த விளையாட்டை திறமையாக விளையாடுவான்?
கிரிக்கெட்
காற்பந்து
கைப்பந்து
9) வினித் எத்தனையாம் தரத்தில் படிக்கிறார்?
தரம் ஐந்து
தரம் ஆறு
தரம் ஏழு
10) துவாரகாவின் தங்கை எந்த பாடசாலையில் படிக்கிறார்?
பம்பலப்பிட்டி பெண்கள் பாடசாலை
பம்பலப்பிட்டி ஆண்கள் பாடசாலை
பம்பலப்பிட்டி கலவன் பாடசாலை